Select Menu

Slider

Technology

Business

Fashion

Powered by Blogger.

Travel

Performance

Cute

My Place

Slider

Racing

Videos


நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017

02.06.2017  கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பம்.

09.06.2017  யாழ்நகரில் இருந்து விநாயகப்பானை எடுத்துவரல்.

10.06.2017  வேள்வி விழா.


நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் 02.06.2017 தொடக்கம் 10.06.2017 வரையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.


முக்கிய குறிப்பு : எம் பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற நயினை வாழ் சைவ அடியார்கள் வதியும் இல்லந்தோறும் அன்னையின் அடியார்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தாங்கள் தங்களால் இயன்ற காணிக்கை பொருட்கள், பழவகைகள், பிஷேகபொருட்கள், தேங்காய், இளநீர் என்பனவற்றை வழங்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

"தாயே ஆகி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி"

                  இங்கனம்
ஆலய பரிபாலன சபையினர்நன்றி.
நயினை மண்ணின் சமயத்துறையின் வலம்..
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி,
- -
யாழ்ப்பாணத்தில் மறைமுகமாக செயற்பட்டு வரும் ”ஆவா” உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சமான சூழலில் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான கருத்துக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,... வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு படித்த பண்பட்ட சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன.
இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்கமுடியாத நிலை.
பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள் நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இல்லாதொழிக்கின்றோம் என இராணுவத்தினர் கூறியிருந்தார்கள்.
குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கனவே தெரிந்துவைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும் ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலீஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது.
ஆவா குழு சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விபரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது.
வடபகுதியில் தமிழ் பேசுகின்ற பொலிஸாரின் எண்ணிக்கை அளவில் மிகச் சிறியது அதனால் கூடுதலான தமிழ் இளைஞர்களை பொலீஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம் பொலீஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றோம்.
இன்னும் அது நடைபெறவில்லை. ஆனால் பயிற்சிகள் 400 தமிழ் இளைஞர்களுக்குக் களுத்துறையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ”ஆவா குழு” என்றும் ”பிரபாகரன் படை என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அநாமதேய குழுக்களால் விடுக்கப்ட்டுள்ள அறிக்கைகள் தமிழ் மக்களைச் சுற்றி ஏதோ ஒருதவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே உணரத்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களை வடபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இராணுவத்திற்கு எதிரான சுலோகங்களைக் கக்கி வருகின்றது.
இவை நம்மவரா அல்லது வேறுசக்தியா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே நாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது வருங்கால சந்ததியின் நன்மை கருதியும் அவர்களை முறையாக நெறிப்பத்த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து அதற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் 31.10.2016 முதல் 05.11.2016 வரை விரதம் கடைப்பிடித்து, 06.11.2016 பாரணையுடன பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
- - -

அண்மையில், சுன்னாகத்தில் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியிருந்தது.
இந்நிலையில், வட மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் விஷேட அதிரடிப்படைப் பிரிவுகளும், பொலிஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுன்னாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதேவேளை, ஆவா குழுவைக் கண்டறிவதிலும் விஷேட அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில், விஷேட அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி.தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகப் பல்வேறு துறை சார்ந்த நூல்களும், கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் சித்திரங்களும் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த காட்சிப்படுத்தலில் உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வாசிப்பு மாதத்தை ஒட்டி "வாசிப்பு உலக அறிவிற்கான நுழை வாயில்" எனும் தொனிப்பொருளில் முன்பள்ளிகள் மற்றும் சனசமூக நிலையங்களூடாக நடமாடும் சேவைகளையும் சுன்னாகம் பொது நூலகம் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, நடமாடும் சேவைகளில் மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபற்றி பயன்பெற்று வருகின்றமையும் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர் மற்றும் பொது வாசகர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளை நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தமிழர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகளை கண்டித்து தென்னிலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 20ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸார் அச்சுறுத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மரணத்திற்கு தீர்வு கோரி நீண்ட தூரம் செல்லாமல் சமாதானத்திற்கு வருமாறு உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம், அளவெட்டி கந்தரோடைப்பகுதியில் வசித்த விஜயகுமார் சுலக்ஷன் என்ற 24 வயதுடைய மாணவன் மற்றும் கிளிநொச்சியில் வசித்த நடராசா கஜன் என்ற 23 மாணவனின் பெற்றோர்களை, பொலிஸ் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமையினால் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனவும் சமாதானத்திற்கு வருமாறும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை இரவு கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இந்த மாணவர்கள் இருவரும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனினும் பின்னர் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் விஜயகுமார் சுலக்ஷனின் மரணம் துப்பாக்கி சூட்டில் இடம்பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மயுரன் குறிப்பிட்டிருந்தார்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விஜயகுமார் சுலக்ஷனின் தந்தையான சின்னதுறை விஜயகுமார் மற்றும் நடராசா கஜனின் தாயாரான சரோஜினை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள், இழப்பீடாக நிதி உதவி வழங்குவதாகவும் தொழில் எதிர்பார்க்கும் ஏனைய பிள்ளைகள் குடும்பத்தில் இருந்தால் அவர்கள் தொழில் வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தருவதாகவும், பிரச்சினையை பெரிதாக்குவதால் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டுள்னர்.
சின்னதுறை விஜயகுமாரின் மூத்த மகன் கடந்த காலத்தில் காணாமல் போயுள்ள நிலையில் அவர் தொடர்பில் ஆராயந்து வந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது மகனையும் இழந்தமையினால் அந்த குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பிள்ளைகளின் மரணத்திற்கு நீதி மாத்திரமே வேண்டும் எனவும், குறித்த பொலிஸ் அதிகாரிகள் தரும் அனுகூலங்கள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மிருகங்களை போன்று தங்கள் பிள்ளைகளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ததன் பின்னர் அந்த பணத்தில் உள்ள பயன் என்ன என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக முப்படையினரால் முன்னெடுக்கும் அநீதிகளுக்கு ஆதரவாக தென்னிலங்கை ஊடகங்கள் குரல் கொடுப்பதில்லை.
ஆனால் இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை அதிகளவான ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட, பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளன.
அந்த வகையில், யாழ் மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம், யாழ் பல்கலை முடக்கம் - போதனா வைத்தியசாலையில் பதற்றம், யாழ் மாணவர்கள் மரணம் - ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது!
மேலும் இனந்தெரியாதவர்கள் பொதுமக்கள் தாக்கப்பட்டும் வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – ஆணைக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் மோட்டார் சைக்கிள்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆணைக்கோட்டை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன், காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் செல்வம் மற்றும் அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர், மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர்களை துரத்திச் சென்றுள்ளனர்.
இதன் போது இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களை தாக்கியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்களை தாக்கியவர்கள் கொச்சை தமிழில் பேசயதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை.
நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்:
> இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்,
*இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..
*புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்…
*வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,
நீர் பிரட்டை போன்றவை என்றும்…

*கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…
> தேள் கடி மருந்துகள்:
*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.
*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
> நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.
> பாம்பு கடித்து விட்டால்.
உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான்.
அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழியவேண்டும்.
சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.
> எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.
உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.
வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.
நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு…..
-

யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் எனப் பலர் குழுமியிருந்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை அழைத்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியிருந்தார்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது “வன்முறைகளில் ஈடுபட வேண்டாம், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றைய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளார், உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் நீதிபதி கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.
மக்களின் கருத்துக்கமைவாக இது கொலையாக இருக்கலாம் என்பதை காலையில் பிரசுரமான செய்தியில் தமிழ்வின் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் தற்போது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் இந்த சம்பவத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன, இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே அவ்வாறு தீப்பிடிக்கும் விண்கற்களால் பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.

இந்த நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2009 இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்தைச் சுற்றி வருகிறது.

15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதையிலிருந்து சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும், இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை, சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.