WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் கோரி முதல்வருக்கு நினைவூட்டல் கடிதம். ! ! !


நயினாதீவு வைத்தியசாலை  தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக உயிருக்கு போராடும் மக்கள்
திடீரென  நோய்வாய்ப்பட்டால்  வைத்தியர் இல்லாமையினால் யாழ்ப்பாணம் உடனடியாக செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. 
வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரி யாழ் மாகணமுதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.



நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கஞ்சா ! ! !


யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நயினாதீவு கடற்கரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவுப்பகுதி  சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னிலங்க யர்கள் (சிங்கள சுற்றுலா பயணிகள்) வருகை தருகின்றனர். 
இது தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் ஊர்காவல் துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை பாதிப்புக்குள்ளாகும் நயினாதீவு மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயற்படாகவும் காணப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் புதிதாக பொருத்தப்பட்ட வீதி ஒழுங்கு சமிஞ்சை ! ! ! படங்கள்




யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


நயினாதீவில் புத்தர் சிலை விவகாரம் ; பதட்டத்தில் நயினாதீவு மக்கள் - யாழில் விசேட கலந்துரையாடல்


யாழ்ப்பாணம் நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் விசேட கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நயினாதீவு பௌத்தவிகாரையின் பிக்குவினால் கடலின் மத்தியில் பிரமாண்டமானமுறையில் அமைக்கப்பட்டுவரும் புத்தர்சிலை விவகாரமானது இந்துக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் பௌத்த மயமாக்கலை மேற்கொண்டு தமிழ் தேசத்தை அழிவிற்கு இட்டுச் செல்வதாகவும் அதனை  சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா 2016 (படங்கள் இணைப்பு)










நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்


நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகதீப விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமூலம் அறிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த விகாராதிபதி இது ஒரு சதித்திட்டம் என்றும் இதற்குப் பின்னால் மறைமுகமான அரசியல் கரம் ஒன்று இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினாதீவு விகாரையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை வடக்கிலுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாகவே குழப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தலையிட்டு, புத்தர் சிலையை அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், அவர் நயினாதீவு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரிடம் கோரியிருந்தார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்துடன் பரப்புரை செய்து வரும் நிலையில், நயினாதீவில் புத்தர் சிலையை அமைப்பதை இடைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய ஊடகச் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியை வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை முடிவுகள் - 2016













நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை - 2016







நயினாதீவு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2016 படங்கள் இணைப்பு