WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவ சாந்தி நிகழ்வு ! ! ! 2015 (படங்கள் இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா 16.06.2015 சாந்தி நிகழ்வுடன் ஆரம்பமாகியது. 


படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.


வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது இன்றைய சாந்தி நிகழ்வுடன் நாளை (17.06.2015) புதன் கிழமை  ஆரம்பமாகின்றது.




அம்பிகை அடியவர்களே அம்பிகையின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.




அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews)இணைந்திருங்கள்..

முக்கிய குறிப்பு:- 

அம்பிகை மெய்யடியார்களே!!!

அம்பிகையின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் எவரிடமும் எக் காணிக்கைகளினையும் வழங்க வேண்டாம் என அம்பிகை அடியவர்களினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர் ஆலய அறங்காவல சபையினர்.

அமுதசுரபி அன்னதானசபையினர் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2015


நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2015


29.05.2015  கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பம்.

05.06.2015  யாழ்நகரில் இருந்து விநாயகப்பானை எடுத்துவரல்.

06.06.2015  வேள்வி விழா.


நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் 29.05.2015 தொடக்கம் 06.06.2015 வரையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.


முக்கிய குறிப்பு : எம் பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற 04.06.2015 அன்று நயினை வாழ் சைவ அடியார்கள் வதியும் இல்லந்தோறும் அன்னையின் அடியார்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தாங்கள் தங்களால் இயன்ற காணிக்கை பொருட்கள், பழவகைகள், பிஷேகபொருட்கள், தேங்காய், இளநீர் என்பனவற்றை வழங்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

"தாயே ஆகி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி"

                  இங்கனம்
ஆலய பரிபாலன சபையினர்



நன்றி.
நயினை மண்ணின் சமயத்துறையின் வலம்..
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா, பச்சை சாத்தி இறக்கும் நிகழ்வு நிகழ்வுகள் ( படங்கள் , வீடியோ இணைப்பு)


நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய இரதோற்சவ திருவிழா  (14.04.2015) அன்று  இடம்பெற்றது .

எம்பெருமான் அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார் .


வீடியோ : நயினை வரன்  நயினாதீவு




படங்கள் : நயினை எம் குமரன்  நயினாதீவு














நன்றி
நிகழ்கால மண்ணின் நிதர்சன தேடல்
நயினாதீவு நட்சத்திர செய்தி


நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 05.04.2015 (வீடியோ இணைப்பு)




நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 05.04.2015 (வீடியோ  இணைப்பு)

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர் திருவிழா ஞாயிறு  [05.04.2015] அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எம்பெருமானின் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க வேத மந்திர மேளதாளங்கள் முழங்க  நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய உட்சவகால குருமணி  கைலாச விஜய்குருமணி அவர்களால் கொடியேற்றப்பட்டது.

அமரர் மகேஸ்வரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னதானம் அவரது உறவினர்களால் வழக்கப்பட்டது.

வீடியோ :அபிராமி வீடியோ நயினாதீவு 


வீடியோ நயினை வரன்  நயினாதீவு


படங்கள் : நயினை எம் குமரன்  நயினாதீவு




மேலதி படங்களை பார்வையிடுவதற்கு . . . . !


நன்றி
நிகழ்கால மண்ணின் நிதர்சன தேடல்
நயினாதீவு நட்சத்திர செய்தி



மரண அறிவித்தல் : திருமதி நடராசா லீலாவதி அவர்கள்


நாவலப்பிட்டியை பிறப்பிடமாவும், நயினாதீவு , யாழ் கொட்டடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடராசா லீலாவதி அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.




இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி அகிலாண்டநாயகி பரராசசேகரம் அவர்கள்



யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டநாயகி பரராசசேகரம் அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரராசசேகரம்(ஓய்வுபெற்ற காணி அலுவலர்- துணுக்காய்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(சுவிஸ்), ரஞ்சினி, சுந்தரவேல்(கனடா), ரதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயராஜன், ரவீந்திரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்மணி, பூமணி, கிருஷ்ணமூர்த்தி, செல்வநாயகம், சந்திரசேகரம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வராஜா, சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபாலராஜன்(கோபு- சுவிஸ்), சிவகுமார்(கோபு- கனடா), சிவநிதி(ரூபி- கனடா), குகராஜா(குகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

சந்திராதேவி, பராசக்தி, மனோரஞ்சினி, ரதி, சாம்பசிவம், கோகிலாம்பாள், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசுப்பிரமணியம், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், றம்மியா, திலீபா ஜனன், வினோபா, சுஜிதன், சுரேக்கா, ஜென்சியா, கௌசியா, சரண்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு

திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

கிரியை

திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

தகனம்

திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada. 

தொடர்புகளுக்கு

சுந்தரவேல் ரூபி — கனடா
தொலைபேசி: +19054178859

ரஞ்சினி சிவகுமார்(கோபு) — கனடா
தொலைபேசி: +16478921418

ரஜினி கோபு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344023238

ரதி குகன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088131367

நேற்றைய தினம் வெளியாகிய, க.பொ.த சா/த பரீட்சை O/L (2014) புள்ளி விபரங்களின் படி நயினாதீவு மகா வித்தியாலய , நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலய பெறுபேறுகள் வருமாறு :



நேற்றைய தினம் வெளியாகிய, க.பொ.த சா/த பரீட்சை O/L (2014)  புள்ளி விபரங்களின் படி  நயினாதீவு மகா வித்தியாலய , நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலய பெறுபேறுகள் வருமாறு :


நயினாதீவு மகா வித்தியாலய மாணவர்களில் 7 மாணவர்கள்  க \பொ \த \உயர் தர கல்வி A/L கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர்- புள்ளி விபரங்கள் வருமாறு :

01.ஜெ.கிருஷாயினி .3A .2C ,2S 
02.சி .பவித்திரா .A ,B ,3C ,2S
03.கோ .நிதர்சன் A ,B ,3C ,3S
04.சி .சஞ்சீவன் A ,B ,5C .S
.05.யோ .அனோசியா A 4C ,2S
06 .ப .துஜீபன் A ,2C 5S
07.ப .சங்கீத் B ,2C .4S


நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க \பொ \த \உயர் தர கல்வி A/L  கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர்- புள்ளி விபரங்கள் வருமாறு :


தரவுகள் மற்றும் படங்கள் :  Nainai M Kumaran​

இம்மாணவர்களின் திறமைக்கு ஊக்குவித்த பாடசாலை சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
Nainativu Starnews