WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 2021


அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 

நேற்றைய தினம் 16.06.2021 புதன் கிழமை 

ஆலய அறங்காவல சபையினரால் பூரண விளக்கத்துடன் உதயன் பத்திரிகையில் அறியப்படுத்தப்பட்டள்ளது.

நாட்டில் நிலவும் அதீத நோய் தாக்கத்தால் அம்பிகையின் மகோற்சவம் 10 பேருடன் மட்டுமே  நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அம்பிகையின் உட்சவம் 10 அடியார்களுடன் நடாத்துவது என்பது அசாத்தியமான விடையம் எனவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க மாவட்ட அதிபரின் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நடாத்தப்பட வேண்டியது விதியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

10.06.2021 தொடக்கம் 25.06.2021 வரை 16 தினங்களும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று 10 இற்கு மேற்படாத ஆலய ஊழியர்களுடன் உள்வீதி வலம் வர திருவருள் கைகூடியுள்ளது என்பதனை உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்.

இவ் ஏற்பாடு கூட இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ் இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அம்பிகை அடியவர்கள் வீட்டில் இருந்தே அம்பாளை வழிபாடு செய்யும் வண்ணம் வேண்டிநிற்கிறார்கள்.



நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017


நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017

02.06.2017  கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பம்.

09.06.2017  யாழ்நகரில் இருந்து விநாயகப்பானை எடுத்துவரல்.

10.06.2017  வேள்வி விழா.


நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் 02.06.2017 தொடக்கம் 10.06.2017 வரையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.


முக்கிய குறிப்பு : எம் பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற நயினை வாழ் சைவ அடியார்கள் வதியும் இல்லந்தோறும் அன்னையின் அடியார்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தாங்கள் தங்களால் இயன்ற காணிக்கை பொருட்கள், பழவகைகள், பிஷேகபொருட்கள், தேங்காய், இளநீர் என்பனவற்றை வழங்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

"தாயே ஆகி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி"

                  இங்கனம்
ஆலய பரிபாலன சபையினர்



நன்றி.
நயினை மண்ணின் சமயத்துறையின் வலம்..
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி,

கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் 31.10.2016 முதல் 05.11.2016 வரை விரதம் கடைப்பிடித்து, 06.11.2016 பாரணையுடன பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா 2016 (படங்கள் இணைப்பு)










நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்


நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகதீப விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமூலம் அறிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த விகாராதிபதி இது ஒரு சதித்திட்டம் என்றும் இதற்குப் பின்னால் மறைமுகமான அரசியல் கரம் ஒன்று இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினாதீவு விகாரையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை வடக்கிலுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாகவே குழப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தலையிட்டு, புத்தர் சிலையை அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், அவர் நயினாதீவு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரிடம் கோரியிருந்தார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்துடன் பரப்புரை செய்து வரும் நிலையில், நயினாதீவில் புத்தர் சிலையை அமைப்பதை இடைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய ஊடகச் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியை வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை முடிவுகள் - 2016













மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு வெளியீட்டு விழா !

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.



பாடல்களுக்கான இசையினை ஈழத்து இசையமைப்பாளர் S.P.ரூபன் அவர்களின் இசையமைப்பிலும் இசைக்கனி கலையகத்தின் ஒலிப்பதிவிலும் மிகவும் அற்புதமாக நயினை மண்ணின் மைந்தன் பாலகவிஞன் T.S.M. நவரூபன் (நயினை அன்னைமகன்) அவர்களின் கவிவரிகளுக்கு . இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் ஈழத்து முன்னணிப்பாடகர்கள் சாகித்திய சீரோண்மணி JR.சுகுமார், திருமதி பார்வதி சிவபாதம், SP.ரூபன், S.சுரேன், S.வாணி , மற்றும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் S.சுபா , S.அபிராமி வழங்கியிருக்கின்றார்கள்.



01)பாடல் :-
சக்திக்கும் சிவனுக்கும்...
பாடியவர்:- J.R.சுகுமார்.

02) பாடல்:-
மூன்றுமுறை...
பாடியவர்:- பார்வதி சிவபாதம்.

03) பாடல்:-
 பிள்ளையாரெனும் நாமம்...
பாடியவர்:- S.P.ரூபன்.

04) பாடல் :-
 தலைத்தீவின் நாயகா...
பாடியவர்:- S.சுரேன்.

05) பாடல்:-
துதிபாட வைக்கின்ற...
பாடியவர்:- வாணி.S

06) பாடல்:-
 தலைத்தீவின் நாயகனே...
பாடியவர்:- J.R.சுகுமார்.

07) பாடல்:-
ஆலமரம் பாடுதையா...
பாடியவர்:- S.சுரேன்.

08) பாடல்:-
மண்டைதீவின் நாயகனே...
பாடியவர்:- வாணி.S

09) பாடல்:-
ஞானம் தருவாய்...
 பாடியவர்:- J.R.சுகுமார்.

10) பாடல்:-
மோதகப்பிரியனே...
பாடியவர்:- S.சுரேன்.


மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.





ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை பெறுக ! 

சுபம் !

தகவல்
எம் மண்ணின் மைந்தன்
நயினை அன்னைமகன்
T S M நவரூபன்.

அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “ Naintivu star " இணையத்தினூடாக இணைந்திருந்து பார்வையிடுங்கள்.



நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,




வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 2015 சிறு வீடியோ பதிவு

வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா (16.08.2015)ஞாயிற்றுக் கிழமை அன்று விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெற்றது.



வீடியோ : நயினை எம் குமரன்







படங்கள் :  முகப்புத்தக நண்பர்கள்





நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா விஞ்ஞாபனம்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 07.08.2015 முதல் 15.08.2015 வரை ஒன்பது தினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திருமுறைபாராயணங்கள் தீபாராதனைகள் இடம்பெற்று நாளை பத்தாம் நாள் (16.08.2015) ஞாயிற்றுக் கிழமை மூலமூர்த்தி எம்பெருமாட்டிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெறும்.


அம்பிகை அடியவர்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.



குறிப்பு :
அடியவர்கள் யாவரும் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி அம்பிகையின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.


அமுதசுரபி அன்னதானசபையினர் சிறப்பாக அடியவர்களுக்கு  அன்னதானப் பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 


அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட (Nainativu Star ) இணையத்துடன் இணைந்திருங்கள்.





நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,




நயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் ! ! ! (படங்கள் வீடியோ இணைப்பு)

வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய முழுத்தோற்றக்காட்சியை அடி வானத்தில் இருந்து மிக அழகாக எடுத்து STAR MEDIA நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்பாளின் திருவருட்கடாச்சம் கிடைக்கப் பிராத்திக்கின்றோம்.
 






வீடியோ 












நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,