WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை முடிவுகள் - 2016













நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை - 2016







நயினாதீவு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2016 படங்கள் இணைப்பு













Nainai Son's production in சர்வமத புண்ணிய பூமி நயினாதீவின் புகழ்பாடும் "மணிபல்லவராகம்" இறுவெட்டு வெளியீடு ! ! ! 02.07.2015


அனைத்து நயினை உறவுகளுக்கு எமது அன்பான வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் சர்வமத புண்ணிய பூமியாம் எங்கள் மணிபல்லவத்தாயின் மடியினிலே எமது முதற் படைப்பான சர்வமத புண்ணிய பூமி நயினாதீவின் வரலாற்றுப் புகழ்பாடும் "மணிபல்லவராகம்" எனும் இறுவெட்டினை நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்கில் நாளை (02.07.15 புதன் கிழமை) இரவு பெரியார்களின் ஆசிகளோடும் சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
இவ் இறுவெட்டில் ஏழாற்றுப்பிரிவோரம் நால்கடலும் சூழ்ந்திருக்க அமைந்த நயினையில் இந்து ,கிறிஸ்தவம், பெளத்தம், இஸ்லாம் போன்ற மதங்கள் ஒற்றுமையும் சகோதரத்துவமும் கொண்டிருந்து அலைகடலின் இசையுடனே நாளும் நால்வேதங்கள் ஒலித்திடும் அற்புத நிகழ்வினையும் ஆபுத்திரனும் மணிமேகலையும் தொழுத மணிபல்லவத்தாயவளின் புகழினையும் அனலையிலிருந்து கடல் தாண்டிவந்து நாகம் பூச்சூடும் அதிசயத்தினையும் நயினையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களினையும் ஓர் பாடல் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளோம்.
இப்பாடலானது ஒளி ஒலிவடிவில் வெளிவருவது மட்டும் அன்றி எங்கள் நயினாதீவின் வரலாறுகள் அடுத்த சந்ததியினருக்கு எடுத்தியம்பும் விதமாக உருவாக்கம் பெற்றுள்ளது மிகையாகாது.
இப்பாடலுக்கான கவிவரிகளை நயினை அன்னைமகன் தொடுக்க ஈழத்தின் புகழ்பூத்த G.சத்தியன் அவர்கள் அற்புத இசை வழங்க S.கோகுலன் மற்றும் B.ஜெகனி அவர்கள் உயிரூட்டியுள்ளார்கள். இப்பாடலுக்கான ஒளியமைப்பினை நயினை மண்ணின் நாயகன் நயினை வரன் அவர்கள் மிகவும் சிறப்பாக தொடுத்துள்ளார். மேலும் இப்பாடலை வருங்கால சந்ததியினரின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கில் Nainai Son's in தயாரிப்பில் இராஜேந்திரம் செந்தூரன், அம்பிகைபாலன் ரஜீதன், நயினை அன்னைமகன், நயினை வரன் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடும் தயாரிக்கப்பட்டு வெளிவருகின்றதை அன்போடு அறியத்தருகின்றோம்.


தகவல்
Nainai Son's

அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை“ Naintivu star " இணையத்தினூடாக இணைந்திருந்து பார்வையிடுங்கள்.




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நேற்றைய தினம் வெளியாகிய, க.பொ.த சா/த பரீட்சை O/L (2014) புள்ளி விபரங்களின் படி நயினாதீவு மகா வித்தியாலய , நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலய பெறுபேறுகள் வருமாறு :



நேற்றைய தினம் வெளியாகிய, க.பொ.த சா/த பரீட்சை O/L (2014)  புள்ளி விபரங்களின் படி  நயினாதீவு மகா வித்தியாலய , நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலய பெறுபேறுகள் வருமாறு :


நயினாதீவு மகா வித்தியாலய மாணவர்களில் 7 மாணவர்கள்  க \பொ \த \உயர் தர கல்வி A/L கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர்- புள்ளி விபரங்கள் வருமாறு :

01.ஜெ.கிருஷாயினி .3A .2C ,2S 
02.சி .பவித்திரா .A ,B ,3C ,2S
03.கோ .நிதர்சன் A ,B ,3C ,3S
04.சி .சஞ்சீவன் A ,B ,5C .S
.05.யோ .அனோசியா A 4C ,2S
06 .ப .துஜீபன் A ,2C 5S
07.ப .சங்கீத் B ,2C .4S


நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க \பொ \த \உயர் தர கல்வி A/L  கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர்- புள்ளி விபரங்கள் வருமாறு :


தரவுகள் மற்றும் படங்கள் :  Nainai M Kumaran​

இம்மாணவர்களின் திறமைக்கு ஊக்குவித்த பாடசாலை சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
Nainativu Starnews

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு மத்திய சன சமூக நிலையம் நாடாத்திய சமய பரீட்சைப் போட்டி பதிவுகள்!

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்தும் சமய பாடப்பரீட்சை இல 48 29.06.2014 அன்று  நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது்





படங்கள் Nainativu Expressnews 

நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி,