WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவில் புத்தர் சிலை விவகாரம் ; பதட்டத்தில் நயினாதீவு மக்கள் - யாழில் விசேட கலந்துரையாடல்


யாழ்ப்பாணம் நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் விசேட கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நயினாதீவு பௌத்தவிகாரையின் பிக்குவினால் கடலின் மத்தியில் பிரமாண்டமானமுறையில் அமைக்கப்பட்டுவரும் புத்தர்சிலை விவகாரமானது இந்துக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் பௌத்த மயமாக்கலை மேற்கொண்டு தமிழ் தேசத்தை அழிவிற்கு இட்டுச் செல்வதாகவும் அதனை  சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.