Select Menu

Slider

Technology

Business

Fashion

Powered by Blogger.

Travel

Performance

Cute

My Place

Slider

Racing

Videos

» » வடக்கில் வாள்வெட்டு கலச்சாரத்தை வழிநடத்துபவர்கள் சிங்கள இராணுவத்தினர் அடித்துக் கூறுகின்றார் வடக்கு முதல்அமைச்சர்?​
«
Next
Newer Post
»
Previous
Older Post

யாழ்ப்பாணத்தில் மறைமுகமாக செயற்பட்டு வரும் ”ஆவா” உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சமான சூழலில் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான கருத்துக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,... வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு படித்த பண்பட்ட சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன.
இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்கமுடியாத நிலை.
பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள் நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இல்லாதொழிக்கின்றோம் என இராணுவத்தினர் கூறியிருந்தார்கள்.
குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கனவே தெரிந்துவைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும் ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலீஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது.
ஆவா குழு சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விபரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது.
வடபகுதியில் தமிழ் பேசுகின்ற பொலிஸாரின் எண்ணிக்கை அளவில் மிகச் சிறியது அதனால் கூடுதலான தமிழ் இளைஞர்களை பொலீஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம் பொலீஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றோம்.
இன்னும் அது நடைபெறவில்லை. ஆனால் பயிற்சிகள் 400 தமிழ் இளைஞர்களுக்குக் களுத்துறையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ”ஆவா குழு” என்றும் ”பிரபாகரன் படை என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அநாமதேய குழுக்களால் விடுக்கப்ட்டுள்ள அறிக்கைகள் தமிழ் மக்களைச் சுற்றி ஏதோ ஒருதவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே உணரத்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களை வடபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இராணுவத்திற்கு எதிரான சுலோகங்களைக் கக்கி வருகின்றது.
இவை நம்மவரா அல்லது வேறுசக்தியா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே நாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது வருங்கால சந்ததியின் நன்மை கருதியும் அவர்களை முறையாக நெறிப்பத்த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து அதற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post