WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் 31.10.2016 முதல் 05.11.2016 வரை விரதம் கடைப்பிடித்து, 06.11.2016 பாரணையுடன பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

யாழ். நூலகத்தில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் ! ! !


வலி.தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகப் பல்வேறு துறை சார்ந்த நூல்களும், கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் சித்திரங்களும் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த காட்சிப்படுத்தலில் உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வாசிப்பு மாதத்தை ஒட்டி "வாசிப்பு உலக அறிவிற்கான நுழை வாயில்" எனும் தொனிப்பொருளில் முன்பள்ளிகள் மற்றும் சனசமூக நிலையங்களூடாக நடமாடும் சேவைகளையும் சுன்னாகம் பொது நூலகம் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, நடமாடும் சேவைகளில் மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபற்றி பயன்பெற்று வருகின்றமையும் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர் மற்றும் பொது வாசகர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளை நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விஷய பூச்சி கடித்தால் இனி பயம் வேண்டாம்! இதோ பாட்டி வைத்தியம்!


நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை.
நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்:
> இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்,
*இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..
*புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்…
*வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,
நீர் பிரட்டை போன்றவை என்றும்…

*கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…
> தேள் கடி மருந்துகள்:
*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.
*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
> நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.
> பாம்பு கடித்து விட்டால்.
உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான்.
அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழியவேண்டும்.
சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.
> எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.
உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.
வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.
நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு…..

சக்தியுடன் பூமியில் மோதப்போகும் விண்கல்!! அவசர எச்சரிக்கை ! ! !




சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன, இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே அவ்வாறு தீப்பிடிக்கும் விண்கற்களால் பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.

இந்த நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2009 இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்தைச் சுற்றி வருகிறது.

15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதையிலிருந்து சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும், இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை, சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நயினாதீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் கோரி முதல்வருக்கு நினைவூட்டல் கடிதம். ! ! !


நயினாதீவு வைத்தியசாலை  தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக உயிருக்கு போராடும் மக்கள்
திடீரென  நோய்வாய்ப்பட்டால்  வைத்தியர் இல்லாமையினால் யாழ்ப்பாணம் உடனடியாக செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. 
வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரி யாழ் மாகணமுதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.



நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கஞ்சா ! ! !


யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நயினாதீவு கடற்கரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவுப்பகுதி  சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னிலங்க யர்கள் (சிங்கள சுற்றுலா பயணிகள்) வருகை தருகின்றனர். 
இது தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் ஊர்காவல் துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை பாதிப்புக்குள்ளாகும் நயினாதீவு மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயற்படாகவும் காணப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் புதிதாக பொருத்தப்பட்ட வீதி ஒழுங்கு சமிஞ்சை ! ! ! படங்கள்




யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


நயினாதீவில் புத்தர் சிலை விவகாரம் ; பதட்டத்தில் நயினாதீவு மக்கள் - யாழில் விசேட கலந்துரையாடல்


யாழ்ப்பாணம் நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் விசேட கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நயினாதீவு பௌத்தவிகாரையின் பிக்குவினால் கடலின் மத்தியில் பிரமாண்டமானமுறையில் அமைக்கப்பட்டுவரும் புத்தர்சிலை விவகாரமானது இந்துக்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் பௌத்த மயமாக்கலை மேற்கொண்டு தமிழ் தேசத்தை அழிவிற்கு இட்டுச் செல்வதாகவும் அதனை  சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா 2016 (படங்கள் இணைப்பு)










நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்


நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகதீப விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமூலம் அறிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த விகாராதிபதி இது ஒரு சதித்திட்டம் என்றும் இதற்குப் பின்னால் மறைமுகமான அரசியல் கரம் ஒன்று இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினாதீவு விகாரையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை வடக்கிலுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாகவே குழப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தலையிட்டு, புத்தர் சிலையை அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், அவர் நயினாதீவு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரிடம் கோரியிருந்தார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்துடன் பரப்புரை செய்து வரும் நிலையில், நயினாதீவில் புத்தர் சிலையை அமைப்பதை இடைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய ஊடகச் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியை வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை முடிவுகள் - 2016













நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை - 2016







நயினாதீவு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2016 படங்கள் இணைப்பு