WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வானில் தோன்றிய அழகான வானவில் ! ! ! படங்கள் இணைப்பு


நயினையில் நீண்ட நாட்களின் பின்பு கன மழை ! ! !





யாழ் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ கொடியேற்றத் திருவிழாவின் படங்கள் , வீடியோ இணைப்பு


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.படங்கள் இணைப்பு

பத்து தினங்களும் விசேட நாதேஸ்வர தவில் கச்சேரியும் ஆலய அமுதசுரபி அன்னதான மடத்தில் அன்னதானமும் இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரை சமய சொற்பொழிவும் இடம்பெறும்.

சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே! 


அனைவரும் ஆச்சார சீலர்களாக தொடர்ந்து பத்து தினங்களும் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, திருவீதியுலாகளில் கலந்துகொண்டு அவனது திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.















மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 20.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  (வீடியோ இணைப்பு)



வீடியோ - அல்லையூர் இணையம், ஸ்ரீ அபிராமி வீடியோ - நயினாதீவு.




ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை  பெறுக ! 

சுபம் !


இங்ஙனம்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
(தர்மகர்த்தாக்கள்),
மகோற்சவ உபயகாரர்கள்,
சித்திவிநாயகப் பெருமானின் தொண்டர்கள்,
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.






நன்றி.
சித்திவிநாயகப் பெருமானின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு வெளியீட்டு விழா !

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.



பாடல்களுக்கான இசையினை ஈழத்து இசையமைப்பாளர் S.P.ரூபன் அவர்களின் இசையமைப்பிலும் இசைக்கனி கலையகத்தின் ஒலிப்பதிவிலும் மிகவும் அற்புதமாக நயினை மண்ணின் மைந்தன் பாலகவிஞன் T.S.M. நவரூபன் (நயினை அன்னைமகன்) அவர்களின் கவிவரிகளுக்கு . இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் ஈழத்து முன்னணிப்பாடகர்கள் சாகித்திய சீரோண்மணி JR.சுகுமார், திருமதி பார்வதி சிவபாதம், SP.ரூபன், S.சுரேன், S.வாணி , மற்றும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் S.சுபா , S.அபிராமி வழங்கியிருக்கின்றார்கள்.



01)பாடல் :-
சக்திக்கும் சிவனுக்கும்...
பாடியவர்:- J.R.சுகுமார்.

02) பாடல்:-
மூன்றுமுறை...
பாடியவர்:- பார்வதி சிவபாதம்.

03) பாடல்:-
 பிள்ளையாரெனும் நாமம்...
பாடியவர்:- S.P.ரூபன்.

04) பாடல் :-
 தலைத்தீவின் நாயகா...
பாடியவர்:- S.சுரேன்.

05) பாடல்:-
துதிபாட வைக்கின்ற...
பாடியவர்:- வாணி.S

06) பாடல்:-
 தலைத்தீவின் நாயகனே...
பாடியவர்:- J.R.சுகுமார்.

07) பாடல்:-
ஆலமரம் பாடுதையா...
பாடியவர்:- S.சுரேன்.

08) பாடல்:-
மண்டைதீவின் நாயகனே...
பாடியவர்:- வாணி.S

09) பாடல்:-
ஞானம் தருவாய்...
 பாடியவர்:- J.R.சுகுமார்.

10) பாடல்:-
மோதகப்பிரியனே...
பாடியவர்:- S.சுரேன்.


மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.





ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை பெறுக ! 

சுபம் !

தகவல்
எம் மண்ணின் மைந்தன்
நயினை அன்னைமகன்
T S M நவரூபன்.

அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “ Naintivu star " இணையத்தினூடாக இணைந்திருந்து பார்வையிடுங்கள்.



நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,




வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 2015 சிறு வீடியோ பதிவு

வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா (16.08.2015)ஞாயிற்றுக் கிழமை அன்று விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெற்றது.



வீடியோ : நயினை எம் குமரன்







படங்கள் :  முகப்புத்தக நண்பர்கள்





நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா விஞ்ஞாபனம்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 07.08.2015 முதல் 15.08.2015 வரை ஒன்பது தினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திருமுறைபாராயணங்கள் தீபாராதனைகள் இடம்பெற்று நாளை பத்தாம் நாள் (16.08.2015) ஞாயிற்றுக் கிழமை மூலமூர்த்தி எம்பெருமாட்டிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெறும்.


அம்பிகை அடியவர்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.



குறிப்பு :
அடியவர்கள் யாவரும் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி அம்பிகையின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.


அமுதசுரபி அன்னதானசபையினர் சிறப்பாக அடியவர்களுக்கு  அன்னதானப் பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 


அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட (Nainativu Star ) இணையத்துடன் இணைந்திருங்கள்.





நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,




நயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் ! ! ! (படங்கள் வீடியோ இணைப்பு)

வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய முழுத்தோற்றக்காட்சியை அடி வானத்தில் இருந்து மிக அழகாக எடுத்து STAR MEDIA நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்பாளின் திருவருட்கடாச்சம் கிடைக்கப் பிராத்திக்கின்றோம்.
 






வீடியோ 












நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,