WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

» » » » நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்! (படங்கள்)

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர்.



இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் மற்றும் ஆலய அறங்காவலர்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்

இக் கலந்துரையாடலில் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துத் தேவைகளும் இந்த வருடமும் எதுவித தடையுமின்றி அமுல்படுத்தப்படும் என அனைத்துத் தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பாதைக்கும் படகுகளுக்கும் இடையில் உள்ள நேரத்தை ஒழுங்குபடுத்துமாறு படகு உரிமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை படகு உரிமையாளர்கள் கடற்படையினருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடற்படைத் தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேநேரம் பச்சை குத்துபவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை எனவும் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வதால் நோய்த் தாக்கம் ஏற்படுவதாகவும் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், இதற்கு பொலிஸ் தரப்பு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை கடந்த காலங்களை விட இவ் வருடம் சுகாதாரம், குடிநீர் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் சிறப்பான முறையிலும் வெகு விரைவாகவும் முன்னெடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.








மேற்படி கலந்துரையாடல் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கேட்போர் கூடத்தில் 04.06.2014  நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


«
Next
Newer Post
»
Previous
Older Post